Tuesday, June 16, 2009

காந்தி சொன்னவை.. காத்திரமானவை.


* இயற்கை அன்னை ஒவ்வொருவனுக்கும் சாதாரண இன்ப வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களைத்தான் உற்பத்தி செய்கிறாள். மனிதன் வீணடிப்பதற்காக அவள் எதையும் உருவாக்குவதில்லை. யாராவது ஒருவன் தேவைக்கு மேல் தனக்கு என்று பயன்படுத்தினால் அடுத்தவனுக்கு அது இல்லாமல் போய்விடும். தேவைக்கு மேல் பயன்படுத்துபவன் என்னளவில் ஓர் கொள்ளைக்காரனே.

* சத்தியத்தை விட மேலான மதம் எதுவுமில்லை. கடவுள் என்பது வாய்மையும் அன்பும் தான்: கடவுள் என்பது ஒழுக்க நெறியும் அறவழியும்தான்: கடவுள் என்பது அச்சமின்மைதான்: கடவுள் என்பது மனச்சாட்சிதான்: நாத்திக வாதிகளும் இந்தக் கடவுளை மறக்க முடியாது.

* உலகில் தீண்டத்தகாதவர் என்று எவருமே இல்லை. ஒரே நெருப்பின் சுடரொளிதான் ஒவ்வொருவரும். மனிதராய் பிறந்த எவரையும் தீண்டத்தகாதவரென்று ஒதுக்கி வைப்பது பெருந்தவறான காரியம்.

0 comments:

I Like the Flowers - by Beat Boppers Children's Music

chitra`s tamil songs

My Lucky Day - Cool Tunes for Kids by Eric Herman

vijay`s tamil songs

Childrens Song

ilayarajah`s tamil hits

About This Blog