Wednesday, June 17, 2009

அன்புக்கோர் அன்னை! - பத்மஜெகன்.


அன்பு தந்தாள்
அரவணைத்து காத்திட்டாள்! - அவள்
அருமைதனை
அருகிருந்து அறியவில்லை
பிரிந்திருந்தும் புரியவில்லை - நீ
பிரிந்திருந்தும் புரியவில்லை!

தெய்வமாய் அவளை நீ
வணங்கிடத் தேவையில்லை
உன்னில் ஓர்
அங்கமாய் வைத்து விடு - ஓர்
அங்கமாய் வைத்து விடு!

கண்னாக உனைக் காத்தாள்
கண்ணீர் தான் சுமந்து
கருணையால் உனை அணைத்தாள்
தேகம் மெலிந்தாலும் - தன்
தேகம் மெலிந்தாலும்
சோகம் தான் சுமந்தாலும்
சோர உன்னை விடமாட்டாள்
சுகமாய் வாழ வழிவகுத்தாள் - நீ
சுகமாய் வாழ வழிவகுத்தாள்!

அறிவில் நீ உயர்ந்திட்டால்
ஆனந்தம் தான் கொள்வாள்
ஆறு பிள்ளை பெற்றாலும் - அவள்
ஆறு பிள்ளை பெற்றாலும்
வேறுபாடு காட்டமாட்டாள்! -அங்கே
வேறுபாடு காட்டமாட்டாள்!

பிள்ளை உன்னை வளர்த்தெடுக்க
கண்களில் நீர் சுமந்தாள்
மெய்யினில் வலி சுமந்தாள்
பயிராய் நீ வளர
உரமாய் அவள் இருந்தாள்!
சான்றோனாய் நீ உயர
சக்தியெல்லாம் அவள் கொடுத்தாள்! -தன்
சக்தியெல்லாம் அவள் கொடுத்தாள்!!

உதிரத்தில் சுமந்தவளை - உன்னை
உதிரத்தில் சுமந்தவளை
பதறவே வைக்காதே!
கதறி அவள்
கலங்கவே வைக்காதே!!

கண்ணீரில் மிதந்தவளை - தினம்
கண்ணீரில் மிதந்தவளை
தண்ணீரில் ஒரு தாமரையாய் - இனி
தண்ணீரில் ஒரு தாமரையாய்
தலைநிமிர்ந்து அவள் சிரிக்க
தண்டாய் நீ இருந்து - தாமரைத்
தண்டாய் நீ இருந்து
தாயவளைக் காத்து விடு! - நல்ல
தனயன் என்று வாழ்ந்து விடு!

நன்றி: அதிரடி VII

0 comments:

I Like the Flowers - by Beat Boppers Children's Music

chitra`s tamil songs

My Lucky Day - Cool Tunes for Kids by Eric Herman

vijay`s tamil songs

Childrens Song

ilayarajah`s tamil hits

About This Blog