Tuesday, March 17, 2009

தகவல் களஞ்சியத்திலிருந்து.. ..

* பக்கவாட்டில் நடக்கும் ஒரே உயிரினம் நண்டு.

* வெட்டுக்கிளிகளின் காதுகள் அவற்றின் கால்களிலேதான் இருக்கிறது.

* சிலவகை மரங்கள் நம்மைப்போல வியர்வையை வெளியேற்றும் தன்மையுடையன.
ஓக் மரம் ஒரு நாளைக்கு 1680 கலன் தண்ணீரை வெளியேற்றுகிறது.

* இன்டெர்நெற் முகவரியில் உபயோகிக்கப்படும் World Wide Web(www)
முறை சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த டிம்பென்னர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

* தென்துருவம் 1912-ஆம் ஆண்டு அமுன்ட்சென் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Read more...

பாலருக்காக ஓர் பாடல்



வெள்ளை முயல் ஓடுது

வேகமாக ஓடுது!

குள்ளமுயல் ஓடுது

குதித்துக் குதித்து ஓடுது!

நெட்டையான காதையே

நீட்டி நீட்டி ஆட்டுது!

குட்டையான வாலையே

குறுகுறுன்று ஆட்டுது! V.

Read more...

Monday, March 16, 2009

ஒரே உண்மை .

கண்ணதாசனின் குட்டிக்கதைகளில் இருந்து.. .. ..

பாதிரியார் ஒருவர் பள்ளிப்பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். எல்லா மாணவர்களையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

'இங்கே இதுவரை ஒரு பொய் கூடச் சொல்லாத மாணவன் உண்டா?'

எல்லா மாணவர்களும் மௌனமாக நின்றனர். பாதிரியார் அமைதியாகப் பெருமூச்சு விட்டார். பின்பு சொன்னார்:

'கர்த்தரே , உமக்கு வணக்கம்! எங்கள் மக்கள் முதன் முறையாக மௌனத்தின் மூலம் ஒரேயோர் உண்மையைப் பேசியிருக்கிறார்கள் என்றார்.

Read more...

இன்னும் அதே நினைப்பா?

இளம் துறவிகள் இரண்டு பேர் பிரயாணம் செய்யும் போது , வழியில் ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தது. ஆற்றில் நிறைய நீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது இளம்பெண் ஒருத்தி துறவிகளை நோக்கி ஓடிவந்தாள்.

ஐயா எனது தாயாருக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அக்கரையில் உள்ள எனது வீட்டிற்கு ஆற்றைக்கடந்து எப்படிப் போவது என்று தெரியவில்லை. தயவுசெய்து என்னை அக்கரைக்கு அழைத்துப்போங்கள் என துறவிகளிடம் அழுதவண்ணம் மன்றாடினாள். அதைக்கேட்டு
முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார் ஒரு துறவி.

இன்னொரு துறவி சிறிது நேரம் யோசித்து விட்டு அந்தப்பெண்ணை அழைத்து தனது தோளில் உட்கார வைத்து ஆற்றைக்கடந்தார். அக்கரையில் அப்பெண்ணைத் தோளிலிருந்து இறக்கிவிட்டார். அப்பெண் அந்தத் துறவிக்கு நன்றி கூறி அவரை வாழ்த்தி விட்டுச்சென்றாள்.

இரண்டு துறவிகளும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள். பேண்ணைத் தோளில் சுமந்து வந்த துறவியிடம் மற்றய துறவி ஒரு துறவி இப்படி நடந்து கொள்ளலாமா? இது நியாயம்தானா? என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு மற்றய துறவி பதில் கூறாமலேயே வந்தார். கேள்வி கேட்ட துறவிக்கோ கோபம் அதிகமாயிற்று.
உங்களுக்கு துறவு நிலை மறந்துவிட்டதா? அப்பெண்ணை நீர் தோளில் சுமந்து வந்தது சரிதானா? நான் கேட்டதற்கு பதில் பேசாமல் வருவது ஏனொ? என்று கடிந்தார்.

பொறுமையாக கேட்டுக்கொண்டு வந்த அந்தத் துறவி, துறவியாரே.. நான் தோளில் சுமந்து வந்த பெண்ணை கரையிலேயே இறக்கி அனுப்பி விட்டேன்! நீங்கள் அவளை இன்னுமா சுமந்து கொண்டு வருகிறீர்கள்? என்றார். கேட்ட துறவியோ வெட்கித் தலை குனிந்தார்

Read more...

Friday, March 13, 2009

போட்டி



ஓருநாள், எனக்கும் வானத்திற்கும்
போட்டி நடந்தது

நான் புன்னகையை எடுத்து வைத்தேன்
அது வைகறையை எடுத்து வைத்தது

நான் கண்ணீரை எடுத்து வைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது

நான் வியர்வைத் துளிகளை எடுத்து வைத்தேன்
அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது

நான் கோபத்தை எடுத்து வைத்தேன்
அது வெயிலை எடுத்து வைத்தது

நான் காதலை எடுத்து வைத்தேன்
அது நிலவை எடுத்து வைத்தது

நான் எண்ணங்களை எடுத்து வைத்தேன்
அது மேகங்களை எடுத்து வைத்தது

நான் எழுத்தை எடுத்து வைத்தேன்
அது மின்னலை எடுத்து வைத்தது

நான் பேச்சை எடுத்து வைத்தேன்
அது இடியை எடுத்து வைத்தது

நான் கவிதையை எடுத்து வைத்தேன்
அது வானவில்லை எடுத்து வைத்தது

நான் உறக்கத்தை எடுத்து வைத்தேன்
அது இருளை எடுத்து வைத்தது

நான் சந்தேகங்களை எடுத்து வைத்தேன்
அது கிரகணங்களை எடுத்து வைத்தது

நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது

இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை எடுத்து வைத்தேன்

வானம் தோற்றது.

(கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளிலிருந்து..)

VII

Read more...

ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்.


பிரபல நகைச்சுவை நடிகர் "ஓமக்குச்சி நரசிம்மன்' சென்னையில் புதன்கிழமை காலமானர். அவருக்கு வயது 73.

ஓமக்குகுச்சி நரசிம்மனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற 3 மகள்களும், காமேஸ்வரன் என்ற மகனும், 3 பேத்திகளும், ஒரு பேரனும் உள்ளனர்.

சிறிது காலமாக தொண்டை புற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சில நாட்களாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். இதையடுத்து திருவல்லிகேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் புதன்கிழமை இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திருச்சியை பூர்விகமாக கொண்ட நரசிம்மன் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 13-வது வயதில் "அவ்வையார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்பு கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பை முடித்து எல்.ஐ.சி.யில் வேலைப் பார்த்து வந்தார்.

பின்பு நடிப்பின் மீது இருந்த தீராத காதலினால் நடிகர் சுருளிராஜன் உதவியுடன் 1969ல் "திருக்கல்யாணம்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

அதை தொடர்ந்து சென்னையில் செயல்பட்டு வந்த "நாடக மந்திர்' நாடக சபாவில் சேர்ந்து 100-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். அப்போது அரங்கேற்றப்பட்ட "நாரதரும் நான்கு கடவுள்களும்' என்ற நாடகத்தில் அவரது "ஓமக்குச்சி' எனும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு ரசிகர்களால் "ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்கப்பட்டார். பின்பு அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக நடித்த படம் "தலைநகரம்'.

ஓமக்குச்சி நரசிம்மனின் 2-வது மகள் நிர்மலா அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் சனிக்கிழமை காலை சென்னை வந்த பிறகு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
Thanks: Thinamani.



Read more...

Thursday, March 12, 2009

பச்சை நெருப்பு - ஈரோடு தமிழன்பன்

மரத்திடமிருந்து
என்ன இரகசியங்களைக்
காற்று கைப்பற்றியது
இந்த
அதிரடிச் சோதனையால்?

வேர்கள்
வெளியிட்டிருக்கும்
அவசர அறிக்கை
தெரிவிப்பதென்ன?

உச்சிவரையில்
பற்றி எரிகிறது
பச்சை நெருப்பு! அதை
உச்சரிக்கும்
எனது ஓசை மீதும்
பற்றிவிட்டது.

பூக்களே இல்லை...
எல்லாம் உதிர்ந்து விட்டன
என் கவிதை மடியில்...
சந்தேகம் இருந்தால்
இந்த வாக்கியங்கள் பக்கம்
உங்கள்
மூக்கை அனுப்பலாம்!

வரம் கேட்டு
நீளும் கிளைக்கரங்களில்
இயற்கை,
என்னையே சில
மழைத்துளிகளாய்
மாற்றிக் கொடுக்கட்டும்
எனக்குச் சம்மதம்!

ஓடி வந்த காற்று,
மரத்தின்
உள்ளங்கையை நீவிவிட்டு
ரேகை பார்க்கிறதோ?

மரத்தின் படம் அல்ல
இது
மரத்தின் மடியில் உட்கார்ந்து
காற்று
எடுத்துக்கொண்ட படம்! VII



Read more...

I Like the Flowers - by Beat Boppers Children's Music

chitra`s tamil songs

My Lucky Day - Cool Tunes for Kids by Eric Herman

vijay`s tamil songs

Childrens Song

ilayarajah`s tamil hits

About This Blog