Friday, June 19, 2009

'பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து பாதுகாக்கும்.

பால் சேர்க்காத 'பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

இத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு சுமார் 33 வயதிலிருக்கும் ஆரோக்கியமான
19 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 5 முறை பால் சேர்க்காத நறுமணப்பொருள்கள் சேர்க்கப்பட்ட தேநீர் கொடுக்கப்பட்டது. ஒருவாரம் இதேபோல் கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் நாளடைவில் நறுமணப் பொருள்கள் அடங்கிய உணவு, பானங்களை ஒதுக்கிவிட்டு பால் சேர்க்காத தேநீரையே விரும்பி அருந்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பால் சேர்க்காத தேநீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களின் மீள்தன்மையை அதிகரிக்கின்றன.

தினமும் ஒருவேளை பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் இதயநாளங்கள் வலுப்படும் எனப் பேராசிரியர் கிலாடியோ ஃபெரி தெரிவித்தார். உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அருந்தப்படுவது தேநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி.

0 comments:

I Like the Flowers - by Beat Boppers Children's Music

chitra`s tamil songs

My Lucky Day - Cool Tunes for Kids by Eric Herman

vijay`s tamil songs

Childrens Song

ilayarajah`s tamil hits

About This Blog