ஞாபகத்திற்கு ஓர் நாட்டார் பாடல். (தாலாட்டு )
முத்தி விளைஞ்ச முத்து
முத்தே பவளமே - என்
முக்கனியே சக்கரையே,
கொத்து மரிக்கொழுந்தே - என்
கோமளமே கண்வளராய்!
கரும்பே கலகலங்க
கல்லாறு தண்ணிவர,
கல்லாற்றுத் தண்ணியிலே
நெல்லா விளைஞ்சமுத்து!
முத்திலே முத்து
முதிர விளைஞ்ச முத்து
தொட்டிலிலே ஆணிமுத்து
துவண்டு விளைஞ்ச முத்து!
தேடி எடுத்த முத்து
தேவாதி ஆண்ட முத்து
பாண்டி பதிச்ச முத்து
பஞ்சவர்கள் ஆண்டமுத்து!
கொட்டி வைத்த முத்தே
குவித்து வைத்த ரத்தினமே
கட்டிப் பசும்பொன்னோ - என்
கண்மணியே நித்திரைபோ!
0 comments:
Post a Comment