இன்னும் அதே நினைப்பா?
இளம் துறவிகள் இரண்டு பேர் பிரயாணம் செய்யும் போது , வழியில் ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தது. ஆற்றில் நிறைய நீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது இளம்பெண் ஒருத்தி துறவிகளை நோக்கி ஓடிவந்தாள்.
ஐயா எனது தாயாருக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அக்கரையில் உள்ள எனது வீட்டிற்கு ஆற்றைக்கடந்து எப்படிப் போவது என்று தெரியவில்லை. தயவுசெய்து என்னை அக்கரைக்கு அழைத்துப்போங்கள் என துறவிகளிடம் அழுதவண்ணம் மன்றாடினாள். அதைக்கேட்டு
முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார் ஒரு துறவி.
இன்னொரு துறவி சிறிது நேரம் யோசித்து விட்டு அந்தப்பெண்ணை அழைத்து தனது தோளில் உட்கார வைத்து ஆற்றைக்கடந்தார். அக்கரையில் அப்பெண்ணைத் தோளிலிருந்து இறக்கிவிட்டார். அப்பெண் அந்தத் துறவிக்கு நன்றி கூறி அவரை வாழ்த்தி விட்டுச்சென்றாள்.
இரண்டு துறவிகளும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள். பேண்ணைத் தோளில் சுமந்து வந்த துறவியிடம் மற்றய துறவி ஒரு துறவி இப்படி நடந்து கொள்ளலாமா? இது நியாயம்தானா? என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு மற்றய துறவி பதில் கூறாமலேயே வந்தார். கேள்வி கேட்ட துறவிக்கோ கோபம் அதிகமாயிற்று.
உங்களுக்கு துறவு நிலை மறந்துவிட்டதா? அப்பெண்ணை நீர் தோளில் சுமந்து வந்தது சரிதானா? நான் கேட்டதற்கு பதில் பேசாமல் வருவது ஏனொ? என்று கடிந்தார்.
பொறுமையாக கேட்டுக்கொண்டு வந்த அந்தத் துறவி, துறவியாரே.. நான் தோளில் சுமந்து வந்த பெண்ணை கரையிலேயே இறக்கி அனுப்பி விட்டேன்! நீங்கள் அவளை இன்னுமா சுமந்து கொண்டு வருகிறீர்கள்? என்றார். கேட்ட துறவியோ வெட்கித் தலை குனிந்தார்
0 comments:
Post a Comment