தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும், தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்.
கலை எப்பொழுதும் இருக்கும்: ஆனால் கலைஞர்கள் இருப்பதில்லை.
செல்வத்தை உபயோகித்தால் தீர்ந்து விடும். ஆனால் கல்வியை உபயோகித்தால் அதிகரிக்கும்.
மனிதனுக்காகத்தான் மதமே தவிர மதத்திற்காக மனிதன் இல்லை. மனிதத் தன்மையை மறந்த எந்த மதமும் வெறும் யானையின் மதமே.
பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்துப்படிக்கிறார்கள்.
கட்டிக்கொடுத்த உணவும் சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நெடுந் தொலைவு வராது. அனுபவமே ஒரு மனிதனோடு எப்பொழுதும் கூட வரும்.
சினம் தவிர்த்து பொறுமை கொள்ளும் போது புண்ணியம் அவனைத் தேடி வருகிறது. அவன் தரணியாளும் தகுதியுடையவனும் ஆகிறான். ஆனால் சினம் ஒருவனை மனவேதனை எனும் புதைகுழியில் தள்ளி விடுவதுடன் மற்றவர் முன்னிலையில் அவன் மதிப்பையும் மழுங்கடித்து விடுகிறது
சிறந்த புத்தகம் - வாழ்க்கை சிறந்த பாடம் - பொறுமை சிறந்த சிந்தனை - கடமை சிறந்த மருந்து - அன்பு சிறந்த பரிசு - மன்னிப்பு சிறந்த ஆசிரியர் - அனுபவம் சிறந்த அணிகலன் -புன்னகை சிறந்த முதலீடு - உழைப்பு சிறந்த செயல் - அகிம்சை சிறந்த நாள் - இன்று சிறந்த பொழுது - இப்பொழுது
I Like the Flowers - by Beat Boppers Children's Music
0 comments:
Post a Comment