ஞாபகத்திற்கு ஒரு நாட்டார் பாடல் - அறுவடைப் பாடல்.
ஆம்பிளைங்க கட்டும் வேட்டி ஏலேலக் குயிலே.
அசடுபட்ட வெள்ளை வேட்டி ஏலேலக் குயிலே.
பொம்பிளைங்க கட்டும் பட்டு ஏலேலக் குயிலே.
அழகான மஞ்சல் பட்டு ஏலேலக் குயிலே.
ஆம்பிளைங்க உண்ணும் சோறு ஏலேலக் குயிலே.
அடிச்சட்டி தீவச்சோறு ஏலேலக் குயிலே.
பொம்பிளைங்க உண்ணும் சோறு ஏலேலக் குயிலே.
பொழுதோட பொங்கற்சோறு ஏலேலக் குயிலே.
ஆம்பிளைங்க தேய்க்கும் எண்ணை ஏலேலக் குயிலே.
அசடுபட்ட தேங்காய் எண்ணை ஏலேலக் குயிலே.
பொம்பிளைங்க தேய்க்கும் எண்ணை ஏலேலக் குயிலே.
அழகான சம்பங்கி எண்ணை ஏலேலக் குயிலே.
ஆம்பிளைங்க வைக்கும் பொட்டு ஏலேலக் குயிலே.
அசடு பட்ட கருவப் பொட்டு ஏலேலக் குயிலே.
பொம்பிளைங்க வைக்கும் பொட்டு ஏலேலக் குயிலே.
அழகான சாந்துப் பொட்டு ஏலேலக் குயிலே.
0 comments:
Post a Comment